அளவீடுகள்
அளவீடுகள்:
§ 1971ல் SI அலகு முறை அனைத்து நாடுகளாலும் எற்றுக் கொள்ளப்பட்டது. அனைத்துலக எடைகள் மற்றும் அளவீடுகள் நிறுவனம் அமந்துள்ள இடம் சவ்ரெஸ் (பாரீஸ்).
§ SI முறையில் 7 அடைப்படை அலகுகளாவன:
§ நீளம் – மீட்டர்
§ காலம் – வினாடி
§ நிறை – கிலோகிராம்
§ மின்னோட்டம் – ஆம்பியர்
§ வெப்பநிலை – கெல்வின்
§ பொருள்களின் அளவு – மோல்
§ ஒளிச்செறிவு – கேன்டிலா
துணை அலகுகள்:
§ தளக்கோணம் – ரேடியன்
§ திண்மக்கோணம் – ஸ்டிரேடியன்
வழிமுறை அலகுகள்:
§ அதிர்வெண் – ஹெர்ட்ஸ்
§ விசை – நியூட்டன் (kgm/s2)
§ அழுத்தம் – பாஸ்கல்
§ ஆற்றல், வேலை – ஜுல்
§ திறன் – வாட்
§ மின்னழுத்த வேறுபாடு – வோல்ட்
§ மின்தேக்குதிறன் – ஃபாரட்
§ மின்தடை – ஓம்
§ மின்னூட்டம் – கூலும்
§ நிறை, பருமன், ஆற்றல், திறன், வெப்பநிலை, அதிர்வெண், பரப்பு, வேலை ஆகியன திசையிலி (Scalar) ஆகும்.
§ இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம், விசை, உந்தம், எடை, கணத்தாக்கு விசை, கோணௌந்தம் முதலியன திசையுறு ஆகும்.
§ வானியல் அலகு எனப்படுவது சூரியனுக்கும் பூமிக்கும் இடையெ உள்ள சராசரி தூரம் ஆகும். 1.496×1011மீ.
§ மீட்டர் அளவுகளைக் கொண்டு 1mm துல்லியமாக அளக்கலாம்.
§ வெர்னியர் அளவுகோலில் 0.1mm (அ) 0.01cm வரை அளக்கலாம்.
§ திருகுஅளவி கொண்டு 0.01mm வரை அளக்கலாம்.
§ இயற்பியல் தராசு கொண்டு 1mg அளவிற்கு துல்லியமாக அளக்கலாம்.
§ இயற்பியல் தராசு எடைப்பெட்டியில் உள்ள மிகக்குறைந்த அளவு 10mg.
வெப்பவியல்:
v ஒரு குறிப்பிட்ட நிறை உள்ள திரவத்தை ஒரு கண்ணாடிக் குடிவையில் இட்டு சூடுபடுத்தும் போது திரவத்தில் மட்டம் குறைந்து பின் உயரும்.
v திரவங்களில் சிறந்த வெப்ப கடத்தியாக செயல்படுவது பாதரசம்.
v நீரின் கொதிநிலை வளிமண்டல அழுத்தத்தை பொறுத்தது. அழுத்தம் அதிகரித்தால் கொதிநிலை அதிகரிக்கும். அழுத்தம் குறைந்தால் கொதிநிலை குறையும்.
v நீர் 80c லிருந்து 00c க்கு குளிர்விக்கும் போது பருமன் 40c வரை குறையும், பின் அதிகரிக்கும்.
v 40c ல் நீரின் அடர்த்தி அதிகம், பருமன் குறைவு.
v 00c ல் நீரின் பருமன் அதிகம், அடர்த்தி குறைவு.
v ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க, அதன் புறப்பரப்பு கருமையாகவும் சொரசொரப்பாகவும் இருக்க வெண்டும்.
v மின்சலவைப்பெட்டியின் அடிப்பகுதி நன்றாக மெருகேற்றப்படுவதற்கு முதன்மை காரணம் கதிர்வீசல் வெப்ப இழப்பை குறைக்க.
v வெப்பக்கதிர் வெற்றிடத்தில் கதிர் வீசல் முறையில் பரவும்.
v ஒரு பொருளுக்கு தொடர்ந்து வெப்பம் அளிக்கப்படும் போது அதன் வெப்பநிலை தொடர்ந்து உயருவதில்லை, ஏனெனில் நிலை மாற்றத்தின் போது பொருளின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்.
இயக்கவியல்:
ஒரு பொருள் கடந்த மொத்த பாதையின் நீளம் தொலைவு ஆகும்.
ஒரு பொருள் நேர்கோட்டுப்பாதயில் கடந்த மொத்த நீளம் இடப்பெயர்ச்சி ஆகும்.
ஒரு பொருள் குறிப்பிட்ட திசையில் விநாடி நேரத்தில் அடையும் இடப்பெயர்ச்சி திசைவேகம் ஆகும்.
திசைவேகம் = இடப்பெயர்ச்சி / காலம்
சராசரி திசைவேகம் = மொத்த இடப்பெயர்ச்சி / நேரம்
சராசரி வேகம் = கடந்த மொத்த தொலவு / காலம்
ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்து புரப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தால் அதன் இடப்பெயர்ச்சி, சராசரி திசைவெக்கம் சுழி ஆகும்.
முடுக்கம் = திசைவேக மாற்றம் / காலம்
சீரான முடுக்கம் கொண்ட பொருளின் இயக்க சமன்பாடுகள்:
V= u+at, S= ut+1/2at2, V2= u2+2as V= இறுதி திசைவேகம், u= தொடக்க திசைவேகம், S= கடந்த தொலைவு, a= முடுக்கம் t= காலம்
தடங்கலின்றி தானே கீழே விழும் பொருள் ஒவ்வொரு வினாடியும் கடக்கும் தொலைவின் விகிதம் S1:S2:S3:…… 12:22:32….. 1:4:9:…..
தடங்கலின்றி தானே கீழே விழும் பொருள் ஒவ்வொரு வினாடியும் அடையும் திசைவெகத்தின் விகிதம் 1:2:3:…..
ஒரு பொருள் கீழே இருந்து மேலே எறியப்பட்டால் அது அடையும் பெரும உயரம் அதன் தொடக்க திசைவேக இருமடிக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.
ஒரு பொருள் மேல்நோக்கி எறியப்பட்டால் அதன் திசைவேகம் குறையும்.
ஈர்ப்பு விசையின் காரணமாக இயங்கும் பொருளின் மேலேற்ற நேரமும் கீழிறக்க நேரமும் சமம்.
ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒரு பொருளின் மேல்நோக்கிய திசைவேகமும் கீழ்நோக்கிய திசைவேகமும் சமம்.
ஒரு பொருள் பெரும நெடுக்கம் அடைய வேண்டுமானால் அப்பொருள் 450 கோணத்தில் எறியப்பட வேண்டும்.
காற்றில்லா சூழ்நிலையில் ஒரே உயரத்தில் இருந்து தானே விழும் வெவ்வேறு எடை உள்ள பொருள்கள் யாவும் ஒரெ நேரத்தில் பூமியை வந்து அடையும்.
தன்னிச்சையான இயக்கம்: காற்றில் பரவும் ஊதுபத்தியின் புகை, கொசுக்களின் இயக்கம்
இடப்பெயர்ச்சி இயக்கம்: வில்லிலிருந்து புறப்படும் அம்பு
சுழற்சி இயக்கம்: ஒரு பொருள் ஒரு அச்சைப் பற்றி இயங்கினால் அது சுழற்சி இயக்கம். எ.கா: மின்விசிறி
அதிர்வு (அ) அலைவு இயக்கம்: ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக கொண்டு முன்னும் பின்னும் இயங்குவது. எ.கா: ஊஞ்சல்
புவியின் இயக்கம் இடப்பெயர்ச்சி, சுழற்சி இயக்கத்திற்கு உதாரணம் ஆகும்.
விசை: F=ma, kgm/sec2 விசையின் அலகு நியூட்டன்.
விசை இயங்கும் பொருளின் வேகத்தை, திசையை, வடிவத்தை மாற்றி அமைக்கும்.
நியூட்டனின் முதல் இயக்க விதி விளக்குவது நிலைமம்.
நிலைமம் பற்றி முதலில் கூறியவர் கலிலியோ
நிலைமம் 3 வகைப்படும். 1) ஓய்வு நிலைமம் 2) இயக்க நிலைமம் 3) திசையில் நிலைமம்.
ஓய்வு நிலைமம்: திடீரென்று இயங்கும் பேருந்தில் நிற்பவர் பின்னோக்கி விழுதல்.
இயக்க நிலைமம்: திடீரென்று நிறுத்தப்படும் பேருந்தில் நிற்பவர் முன்னோக்கி செல்லுதல்.
திசையில் நிலைமம்: நேர்கோட்டில் இயங்கும் பேருந்து வலப்பக்கமாக திரும்பும் போது பயணி இடப்பக்கமாக சாய்வது.
ஒரு பொருளின் நிறை அதிகர்த்தால் அதன் நிலைமம் அதிகரிக்கும்.
ஒரு பொருளின் நிலைமம் அதிகமாக இருந்தால் அதன் முடுக்கம் குறையும்.
கணத்தாக்கு விசை: ஒரு குறைவான காலத்தில் செயல்படும் மிக அதிகமான விசை ஆகும்.
கணத்தாக்கு விசை = விசை × காலஇடைவெளி
ராக்கெட், ஜெட்விமான இயக்கங்கள் நியூட்டனின் 3ம் இயக்கவிதி மற்றும் உந்த அழிவின்மை விதி அடிப்படையில் செயல்படுகிறது
§ வரிநிறமாலை வாயு நிலையிலுள்ள அணுக்களால் வெளியிடப்படும்.
§ பட்டை நிறமாலையை மூலக்கூறுகளிலிருந்து பெறலாம்.
§ தொடர் நிறமாலை சூரியன், உயர்வெப்பநிலையிலுள்ள திட, திரவ பொருள்களிலிருந்து பெறப்படும்.
§ சூரியஒளி (அ) வெள்ளொளி பல வண்ணங்களை அடக்கியது என நியூட்டன் கண்டறிந்தார்.
§ எந்த ஒரு வெப்பநிலையிலும் ஒரு பொருளின் கதிர்வீச்சு திறனுக்கும் ஒளி உட்கவர்திறனுக்கும் இடையே உள்ள தகவு ஒரு மாறிலி – கிர்சாஃப் விதி.
§ கிர்சாஃபின் முதல் விதி - மின்னோட்ட விதி
§ கிர்சாஃபின் இரண்டாம் விதி – மின்னழுத்த விதி
§ கிர்சாஃப் விதிகளின் முக்கியமான பயன்பாடு wheatstones bridge.
§ சூரியநிறமாலை வரிகள், உட்கவர்நிறமாலைக்கு எடுத்துக்காட்டு – ஃபிரான்ஹோபர் வரிகள்.
§ ஒளிச்சிதறல் அளவானது அதன் அலைநீளத்தின் நான்குமடிக்கு எதிர்விகிததில் உள்ளது – ராலே ஒளிச்சிதறல் விதி.
§ இராமன் விளைவை குவாண்டம் கொள்கை மூலம் நன்கு விளக்க முடியும்.
§ லேசர் ஒளியானது ஓரியல் அலையாகும்.
§ ரூபித்தண்டு அலுமினியம் ஆக்சைடால் ஆன ஒரு படிகம். இத்தண்டில் Al3÷ அயனிகள் Cr3÷ அயனிகளால் இடம் பெயர்வு செய்யப்படுவதால் பச்சை நிறம் உட்கவரப்பட்டு சிவப்பு நிறம் உமிழப்படுகிறது.
§ ஒர் அலகு காந்த முனை = 10-7 N
§ காந்தமுனை வலிமையின் அலகு வெபர் (அ) ஆம்பியர் மீட்டர்.
§ காந்தப்புல செறிவின் அலகு ஆம்பியர் மீட்டர்-1
§ காந்தப்பாய அடர்த்தி அலகு டெஸ்லா (அ) வெபர் மீட்டர்-2
§ காந்த திருப்புத்திறன் அலகு வெபர் மீட்டர்.
§ பொருளின் காந்தமாக்க செறிவு அலகு ஆம்பியர்/மீட்டர்.
§ டயா, பாரா, காந்தத்தன்மையை எலக்ட்ரான் கொள்கை அடிப்படையில் விளக்கலாம்.
§ ஃபெர்ரா காந்த தன்மையை பெருங்கூறு கொள்கை அடிப்படையில் விளக்கலாம்.
§ வான் – டி – கிராஃப் மின்இயற்றி மூலம் மிக அதிக மின்னழுத்தத்தை பெற முடியும். இது அணுக்கரு விளைவினை ஏற்படுத்தும்.
§ எலக்ட்ரான்கள் கடத்தப்படுவதின் மூலம் ஒரு கடத்தியில் மின்னூட்டம் பாய்கிறது – தால்மன் & ஸ்டீவர்ட்
§ மிகக்குறைந்த வெப்பநிலையில் சில உலோகங்களின் சேர்மங்கள் மற்றும் உலோகக்கலவைகளின் மின் தடை எண் சுழி மதிப்பை அடைகிறது. இந்நிலையை எய்திய பொருள்கள் மீகடத்திகள் எனப்படும்.
§ முதலில் மீகடத்தும் பண்பை பாதரசத்தில் ஆராய்ந்தவர் H.K.ஹோன்ஸ்.
§ பர்டீன், கூப்பர், ஸ்க்ரைப்பர் (BCS Theory ) என்பவர்களால் மீகடத்தும் பண்பு முதலில் விளக்கப்பட்டது.
§ ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை காட்டும் கருவி கால்வனோமீட்டர்.
§ X- கதிர்களின் அலைநீளம் கண்டுபிடிக்க பிராக் நிறமாலைமானி.
§ ஹைட்ரஜன் நிறமாலை வரிசை = லைமன், பாமர், பாஷன், பிராக்கெட், ஃபண்ட்.
§ ஐசோடோப்புகளின் அணுநிறைகளை துல்லியமாக அளந்தறியும் ஓர் அமைப்பு – பெயின்பிரிட்ஜ் நிறமாலைமானி.
§ திட, திரவ, வாயு பொருள்களின் கதிர்வீச்சு – கெய்கர்முல்லர் எண்ணி.
§ சில பொருள்களின் ஒளிரும் தன்மை – சிண்டிலேஷன் எண்ணி.
§ சைக்ளோட்ரான் கண்டுபிடித்தவர் – லாரென்ஸ்
§ முதல் அணுக்கரு உலையை வடிவமைத்தவர் – ஹென்ரிகோ ஃபெர்மி.
§ யுரேனியத்தை நியூட்ரான் கொண்டு பிளக்க முடியும் என முதலில் கண்டுபிடித்தவர்கள் – ஹான் & மெய்னர்.
§ அடிப்படைத்துகள்கள் – ஃபோட்டான், லெப்டான், மீசான், பாரியான், மியான், நியூட்ரினோ.
§ ஒளியியல்
§ ஒளிக்கதிர்கள் நேர்கோட்டுப்பாதையில் செல்கின்றன. ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு செல்லும் போது தன் பாதையில் விலக்கமடையும் நிகழ்வு ஒளிவிலகல் எனப்படும். ஒளிவிலகல் விதிகள் : 1. படுகதிர், விலகுகதிர், படுபுள்ளியில் வரையப்படும் செங்குத்து கோடு ஒரே தளத்தில் அமையும். 2. படுகோணத்தின் Sin மதிப்பிற்கும், விலகுகோணத்தின் Sin மதிப்பிற்கும் இடையே உள்ள விகிதம் ஒரு மாறிலி ஆகும். µ = Sin i / Sin r இது ஸ்நெல் விதி எனப்படும்.
விண்மீன்கள் மின்னுவதற்கு காரனம் ஒளிவிலகல் ஆகும். வெவ்வேறு ஊடகங்களில் ஒளியின் திசைவேகம் வெவ்வேறு மதிப்பை பெறுவதால் ஒளிவிலகல் ஏற்படுகிறது. காற்று அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் - 3×108 மீ/வி நீரில் ஒளியின் திசைவேகாம் – 2.25×108 மீ/வி ஒளிவிலகல் எண் = காற்றில் ஒளியின் திசை வேகம்/ ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் நீரின் ஒளிவிலகல் எண் = 1.33 வைரத்தின் ஒளிவிலகல் எண் = 2.42 ஓர் ஒளிக்கதிர் முப்பட்டகத்தின் வழியே செல்லும் போது பல்வேறு நிறங்களாக பிரிகை அடையும் நிகழ்ச்சி நிறப்பிரிகை எனப்படும். நிறப்பிரிகையின் போது அதிக விலகலடையும் நிறம் – ஊதா நிறப்பிரிகையின் போது குறைவாக விலகலடையும் நிறம் – சிவப்பு அபாயகரமான இடங்களில் சிவப்பு நிறம் பயன் படுத்த காரணம் அதன் அலைநீளம் அதிகமாக இருப்பது ஆகும்.
எளிய நுண்ணோக்கியில் குவிலென்ஸ் பயன்படுகிறது. கூட்டு நுண்ணோக்கியில் பொருளருகு லென்ஸ் குறைந்த குவியதூரம் கொண்டது. கண்ணருகு லென்ஸ் அதிக குவிய தூரம் கொண்டது. தொலைநோக்கியில் பொருளருகு லென்ஸ் அதிக குவியதூரம் கொண்டது. கண்ணருகு லென்ஸ் குறைந்த குவியதூரம் கொண்டது. விழி லென்ஸின் குவியதூர மதிப்பு – 2.5cm கண்ணின் மீச்சிறு தொலைவு – 25cm கிட்டப்பார்வை : அருகில் உள்ள பொருள்களை தெளிவாக காண இயலும். தொலைவில் உள்ள பொருள்களை தெளிவாக காண இயலாது. பிம்பம் விழித்திரைக்கு முன்பே விழும். காரணம் விழிக்கோளம் நீண்டு விடுவது ஆகும். கிட்டப்பார்வை சரி செய்ய குழிலென்ஸ் பயன்படுகிறது. தூரப்பார்வை: தொலைவில் உள்ள பொருளை தெளிவாக காண இயலும். அருகில் உள்ள பொருளை தெளிவாக காண இயலாது. பிம்பம் விழித்திரைக்கு பின் விழும். காரணம் விழிக்கோளம் சுருங்கி விடுவது ஆகும். தூரப்பார்வை சரி செய்ய குவிலென்ஸ் பயன்படுகிறது. இயல்பாக முதுமை காரணமாக இக்கோளாறு ஏற்படுகிறது. இந்த இரண்டு குறைபாடுகளும் ஒருவருக்கு இருந்தால் குழி, குவி லென்சுகளை ஒரே கண்ணாடியில் பொருத்தி அணிய வேண்டும். இதற்கு இரு குவியகண்ணாடி என்று பெயர். இதை கண்டுபிடித்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். ஒரு பொருளின் நிறம் அது எதிரொளிக்கும் ஒளியின் நிறத்தை பொறுத்தது. எல்லா நிறங்களையும் எதிரொளித்தால் அது வெண்மை நிறத்தில் தெரியும், கருமை நிற பொருள் எல்லா நிறங்களையும் உட்கவரும். ஊதா நிறத்தின் அலைநீளம் 440-460 nm சிவப்பு நிறத்தின் அலைநீளம் 620-720 nm அடிப்படை நிறங்கள் நீலம், சிவப்பு, பச்சை அடிப்படை நிறங்களை சரியான விகிதத்தில் சேர்க்கும் போது ஏனைய நிறங்களை உருவாக்கலாம். ஆனால் ஏனைய நிறங்களை எந்த விகிதத்தில் சேர்த்தாலும் அடிப்படை நிறங்களை உருவாக்க முடியாது. வெள்ளை நிறம் அனைத்து நிறங்களின் கலவை ஆகும். வானவில் என்பது மழைத்துளி தோற்றுவிக்கும் ஒரு சூரிய நிறமாலை ஆகும். இது சூரியனுக்கு எதிர்திசையில் வட்ட வடிவில் தோன்றும். ஆனால் நாம் அதன் ஒரு பகுதியை மட்டுமே காண இயலும். முதன்மை வானவில்: சூரியஒளி ஒரு முழுஅகஎதிரொளிப்பும் இரண்டு முறை ஒளிவிலகலும் அடைவதால் இது தோன்றுகிறது. சிவப்பு நிறம் வெளிப்பக்கமும் ஊதாநிறம் உள்பக்கமாகவும் அமையும். சூரியனின் ஏற்றக்கோணம் 420 மேல் இருக்குமானால் இதனை காண இயலாது. இரண்டாம் நிலை வானவில்: இரு முழுஅகஎதிரொளிப்பும் இரு முறை ஒளிவிலகலும் அடைவதால் இது ஏற்படுகிறது. ஊதாநிறம் வெளிப்பக்கமாகவும் சிவப்பு நிறம் உட்பக்கமாகவும் அமையும். சூரியனின் ஏற்றக்கோணம் 540 க்கு மேல் இருக்குமானால் இதனை காண இயலாது. இரண்டு வானவில்லுக்கு இடைப்பட்ட பகுதி கருமையாக இருக்கும். கண்ணின் பார்வை நீட்டிப்பு திறன் 1/16 வினாடி. பொருளை நீக்கிய பின்பும் மிகக்குறுகிய நேரம் பொருளின் பிம்பத்தை காண இயலும் நிகழ்ச்சி கண்ணின் பார்வை நீட்டிப்பு திறன் எனப்படும். திரைப்படத்தில் ஒரு படச்சட்டம் காட்சியளிக்கும் நேரம் 1/24 வினாடி ஆகும். பார்வை நீட்டிப்பு திறன் காரணமாக படங்களை தொடர்ச்சியாக இயங்குவது போல காண முடியும். லென்சின் திறன் டயாப்டர் என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. ஒரு குவிலென்சின் குவியதொலைவின் தலைகீழ் மதிப்பு அதன் திறன் எனப்படும். P= 1/f ஒரு மெல்லிய லென்சின் குவியதொலைவு 40 cm எனில் அதன் திறன் P= 1/f =1/0.4 = 2.5D நீர்மூழ்கி கப்பலில் மேலே உள்ள பொருளை காண பெரிஸ்கோப் பயன்படுகிறது. இதில் முழுஅகஎதிரொளிப்பு முப்பட்டகங்கள் பயன்படுகின்றன. எண்டோஸ்கோப்பில் கண்ணாடி ஒளி இழை பயன்படுகிறது. இது முழு அக எதிரொளிப்பை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. கானல்நீர்: பாலைவனங்களிலும் வெப்பமான தார்சாலைகளிலும் காணப்படும் ஒளியியல் மாயத்தோற்றம் கானல்நீர் ஆகும். இதற்கு காரணம் முழு அக எதிரொளிப்பு. இதில் பொருளின் தலைகீழான மாயபிம்பம் தோற்றுவிக்கப்படும். லூமிங்: குளிர்ந்த பகுதிகள் மற்றும் கடலின் மேல் பகுதியில் தோன்றும் ஒளியியல் மாயத்தொற்றம் லூமிங் எனப்படும். இதில் பிம்பம் நேராகவும் பொருளின் மேல்புறமும் காணப்படும். பேருந்து முகப்பு விளக்குகளில் பயன்படுவது குழிஆடி. ஓட்டுனர் அருகில் பின்னால் வரும் வாகனங்களை காண குவிஆடி பயன்படும். மெய்பிம்பம் தலைகீழானது. திரையில் பிடிக்க இயலும். செங்குத்தான வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களை காண குவிஆடி பயன்படுகிறது. கடிகாரம் பழுது பார்ப்பவர், கைரேகை வல்லுனர்கள் பயன்படுத்துவது குவிலென்ஸ். நீரில் வைக்கப்பட்ட உலோகத்தண்டு வளைந்து காணப்படுவதற்கு காரணம் ஒளிவிலகல். சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையை காண பயன்படும் வாய்பாடு = 360/Ø-1 600 சாய்வில் இருசமதள ஆடிகள் வைக்கப்பட்டால் அதில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை = 360/60 -1 = 6-1 = 5

§
§ மின்னணுவியல்:
டிரான்ஸிஸ்டரை உருவக்கியவர்கள் சாக்கோலி, பிராட்டையின், பார்டியின். டிரான்ஸிஸ்டர் அமைப்பிற்கான சமன்பாடு IE = IC + IB (கிர்ச்சாஃப் விதிப்படி ) பெருக்கிச்சுற்றில் உள்ளீடு மின்மறுப்பு அதிகமாகவும், வெளியீடு மின்மறுப்பு மிகக்குறைவாகவும், மின்னோட்டம், ஆற்றல் பெருக்கம் அதிகமாகவும் இருத்தல் வேண்டும். அடிப்படை கேட்கள் – OR, AND, NOT பொது கேட்கள் – NOR, NAND OR கேட்டின் பூலியன் சமன்பாடு A+B = C AND கேட்டின் பூலியன் சமன்பாடு A×B = C
சில கண்டுபிடிப்பாளர்கள்:
கால்குலஸ் = நியூட்டன் பாரோமீட்டர் = டாரிசெல்லி DNA குளோனிங் = போயர் & கோஹன் ஹைட்ரஜன் குண்டு = எட்வர்ட் டெல்லர் பாஸிட்டிவ் எலெக்ட்ரான் = ஆண்டர்சன் பாஸிட்ரான் கொள்கை = டிராக் புரோட்டான் = கோல்ட்ஸ்டீன் நியூட்ரான் = சாட்விக் எலக்ட்ரான் = J.J.தாம்சன் நியூக்ளியஸ் = ரூதர்போர்டு அணுக்கொள்கை = டால்டன் எலக்ட்ரான் நிறை = 9.08×10-31 kg எலக்ட்ரான் மின்சுமை = 1.602×10-19 கூலூம் புரோட்டான் நிறை = 1.673×10-27 kg நியூட்ரான் நிறை = 1.675×10-27 kg நுண்துகள் கொள்கை = நியூட்டன் அலைக்கொள்கை = ஹைஜன்ஸ் மின்காந்த கொள்கை = மாக்ஸ்வெல் குவாண்டம் கொள்கை = ஐன்ஸ்டீன் நவீன வெப்ப இயக்கவியல் கொள்கை = பெர்னௌலி நவீன வெப்ப இயக்கவியல் கொள்கைக்கு கணித அடிப்படையை அளித்து தற்போதைய வடிவம் கொடுத்தவர்கள் = கிளாடியஸ் & மாக்ஸ்வெல் கதிரியக்க சிதைவு விதி = சாடி & ஃபஜன் அணுக்கரு பிளவை = ஆட்டோஹான் & ஸ்ட்ராஸ்மன் ஒளி மின்விளைவு = ஹென்ரிக் ஹெர்ட்ஸ் இரட்டை ஒளிவிலகல் = பார்த்தோலினஸ் ஒளிச்சிதறல் = ராலே மடக்கைகள் (logarithms) = ஜாண் நேப்பியர் எலக்ட்ரான் கொள்கை, அணுவமைப்பு = போர் மின்காந்த தூண்டல், மின்னாற்பகுப்பு விதிகள் = ஃஃபாரடே செயற்கை அணுப்பிளவு = ஃஃபெர்மி ரூபி லேசர் = தியோடர் H. டெட் மெய்மன் போலராய்டு = லேண்ட் நவீன போலராய்டு = ஹெராபத் எதிரொளிப்பின் மூலம் தளவிளைவு ஒளியை கண்டுபிடித்தவர் = மாலஸ் கால்சைட் படிகத்தில் இரட்டை விலகல் = பார்த்தோலினஸ்

கதிரியக்கம்:
§ இயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர் ஹென்ரி பெக்கொரல்.
§ செயற்கை கதிரியக்கம் கண்டறிந்தவர் கியூரி ஜூலியட்.
§ α – கதிர்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை. β கதிர்கள் எதிர் மின்னூட்டம் கொண்டவை. காமா கதிர்கள் மின்னூட்டம் அற்றவை.
§ வெப்பநிலை, அழுத்தம் போன்ற இயற்பியல் காரணிகளாலோ வேதியியல் காரணிகளாலோ கதிரியக்கம் பாதிக்கப்படுவது இல்லை.
§ காமா கதிர்கள் அணுவின் உட்கருவிலிருந்து தன்னிச்சையாக உமிழப்படும் கதிர்வீச்சினால் உருவாகிறது. எனவே இது ஒரு அணுக்கரு செயலாகும்.
§ X- கதிர்கள் அணுக்களின் உயர்ந்த ஆற்றல் மட்டங்களின் இருந்து தாழ்ந்த ஆற்றல் மட்டங்களுக்கு எலக்ட்ரான்கள் இடம் பெயர்வதால் உருவாகின்றன. எனவே இது ஒரு அணு செயலாகும்.
§ தூண்டப்பட்ட கதிரியக்க தனிமங்கள் ரேடியோ ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
§ தாவரங்கள் உட்கொள்ளும் உரங்களின் அளவை கண்டறிய ரேடியோ பாஸ்பரஸ் பயன்படுகிறது.
§ மெல்லிய தாள்கள், எஃகு தகடுகள் இவற்றின் தடிமனை அளவிட ரேடியோ ஐசோடோப்புகள் வெளியிடும் காமா கதிர்கள் பயன்படுகிறது.
§ கோபால்ட்-60 புற்றுநோய் சிகிச்சையிலும், சோடியம்-24 இதயம் செயல்படும் திறனை கண்டறியவும், இரும்பு-59 அனீமியா எனப்படும் இரத்த சோகை சிகிச்சையிலும், பாஸ்பரஸ்-32, ஸ்ட்ரான்சியம்-90 தோல் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுகிறது.
§ இதய பேஸ்மேக்கர் கருவிக்கு ஆற்றல் அளிக்க அணுக்கரு மின்கலம் பயன்படுகிறது.
கதிரியக்க சிதைவு:
§ α- சிதைவு – கதிரியக்க நிகழ்வில் α கதிர் வெளியிடப்படும் போது அணு எண்ணில் 2 குறையும். நிறை எண்ணில் 4 குறையும்.
§ யுரேனியம் ஒரு α துகளை வெளியிட்டால் தோரியமாக மாறும்.
§ α துகள் He அணுவின் உட்கருவுக்கு சமம்.
§ β சிதைவு – β துகள் வெளியிடப்படும்போது அணு எண்ணில் 1 கூடும். நிறை எண்ணில் மாற்றமில்லை.
§ ரேடியம் ஒரு β துகளை வெளியிடுவதால் ஆக்டினியம் என்ற தனிமமாக மாறும்.
§ Ý சிதைவு- Ý கதிர் வெளியிடப்படும் போது அணு எண், நிறை எண்ணில் மாற்றம் ஏதும் இல்லை.
§ ஒரு அணு நிறை அளவி 1amu = 931 mev
§ ஒரு அணுக்கரு உலையில் எரிபொருளாக பயன்படுபவை U235 , Pu239 , U233 . இவற்றை பிளவு பொருள் எனவும் கூறலாம்.
§ இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் U238, U235 இருக்கும். இதில் U238 – 99.28%, U235 – 0.72%
§ செறிவூட்டப்பட்ட யூரேனியம்- U235.
தணிப்பான்கள் (Moderators ):
§ தணிப்பான்கள் நியூட்ரான்களின் வேகத்தை குறைக்க பயன்படுகின்றன.
§ கிராபைட், பெரிலியம், கனநீர், பெரிலியம் ஆக்சைடு – தணிப்பானாக பயன்படும்.
§ ஒரு நல்ல தணிப்பான் உயர்ந்த உருகுநிலையும் குறைந்த அணு எண்ணையும் கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் கழிகள்:
§ இவை நியூட்ரான்களை உட்கவரும் பொருள்களால் ஆனவை.
§ காட்மியம், போரான், ஹேப்னியம்- கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படும்.
குளிர்விப்பான்கள்:
§ வெப்பத்தை உட்கவர பயன்படுகிறது. சாதாரண நீர், கன நீர், காற்று, Co2, ஹீலியம். திரவ சோடியம்- குளிர்விப்பானாக பயன்படும்.
§ உயர்ந்த தன்வெப்ப ஏற்புதிறனையும் உயர்ந்த உருகு நிலையும் கொண்டவை குளிர்விப்பானாக பயன்படுகிறது.
§ அணுக்கரு உலைகளில் தணிப்பானாகவும், குளிர்விப்பானாகவும் பயன்படுவது கனநீர் ஆகும்.
v சூரியன், விண்மீன்கள் இவற்றின் அதிக ஆற்றல் அணுக்கரு இணைவு முறை மூலம் கிடைக்கிறது. இதை விளக்கியவர் பெத்தே.
v அணுக்கரு பிளவில் இணைப்பானாக பயன்படுபவை நியூட்ரான்கள். அணுக்கரு இணைவில் புரோட்டான்கள் இணைப்பானாக பயன்படுகின்றன
.
v C-14 ன் அரை ஆயுள் காலம் 5600 ஆண்டுகள். அது முன்பிருந்த அளவில் ¼ ஆக மாற 11200 ஆண்டுகள் ஆகும்
அணுக்கரு இயற்பியல்:
§ அணு நடுநிலையானது, மின்சுமையற்றது. இதில் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் சம எண்ணிக்கையில் உள்ளன.
§ அணுக்கரு நேர்மின்சுமை கொண்டது. ஏனெனில் புரோட்டான்களும் மின்சுமை அற்ற நியூட்ரான்களும் உள்ளன.
§ நியூக்ளியான்கள் என்பவை புரோட்டான் & நியூட்ரான் ஆகும்.
§ அணு எண் என்பது அதிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
§ நிறை எண் என்பது உட்கருவிலுள்ள புரோட்டான் + நியூட்ரான் எண்ணிக்கை.
மின்காந்த அலைகள்: பருப்பொருள் ஊடகத்தின் துணையின்றி பரவும் அலைகள் மின்காந்த அலைகள் ஆகும். அலைநீள அடிப்படையில் மின்காந்த அலைகள் 7 வகைப்படும்.
§ மின்காந்த கதிர்கள் ( அலைநீள ஏறுவரிசையில் ): 1. காமா கதிர்கள் 2. X கதிர்கள் 3. புற ஊதா கதிர்கள் 4. புலப்படும் கதிர்கள் 5. அகச்சிவப்பு கதிர்கள் 6. நுண் அலைகள் 7. ரேடியோ அலைகள்
§ மின்காந்த கதிர்களில் அலைநீளம் குறைவானது காமா கதிர்கள், அலைநீளம் அதிகமானது ரேடியோ அலைகள்.
பொதுப்பண்புகள்:
§ எல்லா மின்காந்த அலைகளும் காற்று அல்லது வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் செல்லும். 3×108 m/s.
§ மின்காந்த அலைகள் பரவ ஊடகம் தேவை இல்லை.
§ இவை அனைத்தும் குறுக்கலைகள்.
§ அலைகளின் அடிப்படைப் பண்புகளான ஒளி விலகல், ஒளியின் குறுக்கீட்டு விளைவு, எதிரொளித்தல், விளிம்பு விளைவு போன்றவைகளுக்கு உட்படுகின்றன.
§ மின்னூட்டம் அற்றது. ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவ இவை ஆற்றலை கடத்துகின்றன.
X-கதிர்கள்:
§ இதை கண்டறிந்தவர் ராண்ட்ஜன். X- கதிர்கள் உருவாக்க கூலிட்ஜ் குழாய்கள் பயன்படும்.
§ அதிவேக எலக்ட்ரான்கள் உயர் அணு எடை கொண்ட இலக்குப் பொருள் மீது மோதுவதால் X-கதிர்கள் உருவாகின்றன.
§ மின்புலத்தாலோ காந்தப்புலத்தாலோ இவை பாதிக்கப்படுவது இல்லை.
§ துத்தநாக சல்பைடு, பேரியம் பிளாட்டினோ சயனைடு போன்ற பொருள்களின் மீது X-கதிர்கள் படுவதால் ஒளிர்தலை உண்டாக்குகின்றன.
§ ஒளிப்படத்தகடுகளை பெருமளவில் பாதிக்கின்றன.
§ வாயுக்களின் வழியே செல்லும் போது அவற்றை அயனியாக்கம் செய்கின்றன.
§ கண்ணாடி, தசை, மரம் போன்ற பொருள்களை ஊடுருவி செல்லும்.
§ எலும்பு, தங்கம், காரியம் போன்ற பொருள்களை ஊடுருவாது.
§ தசையில் ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற இலேசான தனிமங்கள் உள்ளன. இவை X- கதிரை உறிஞ்சுவது இல்லை. எலும்பின் வழியே X- கதிர்கள் செல்லும்போது உறிஞ்சப்படுகிறது.
§ Radiography என்பது X- கதிர் படவியல்.
§ Radiotheraphy என்பது X- கதிர் மருத்துவ முறை.
§ உணவுப்பாதை, நுரையீரலில் உள்ள தேவையற்ற பொருள்களை கண்டறிய X-கதிர்கள் உதவுகிறது.
§ தோல் நோய்களை குணப்படுத்த, நாள்பட்ட புற்றுநோய் கட்டிகளை கண்டறிய X- கதிர்கள் உதவுகிறது.
§ ரத்தினக்கல்லின் உண்மைத்தன்மையை கண்டறிய, டென்னிஸ் பந்து, ரப்பர் டயர் குறைபாடுகளை கண்டறிய, போலிப்பத்திரம், கள்ள ரூபாய் கண்டறிய X-கதிர்கள் உதவுகின்றன.
அகச்சிவப்பு கதிர்கள்:
§ இதன் இயற்கை மூலம் சூரியன். மின்விளக்கு, நெருப்பு, வெப்பமான பொருள்களின் மூலக்கூறுகள் – செயற்கை மூலங்கள்.
§ மனித உடல் வெளியிடும் அ.சி.கதிர்களின் அலைநீளம் 0.1mm – 0.01mm வரை.
§ அடர்ந்த மூடுபனியை கடந்து படமெடுக்க, ரத்தக்குழாயை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்க, பிசியோதெரபி முறையில் எலும்பு, தசைப்பகுதியில் ஏற்படும் வலியை குறைக்க, வர்ணங்களை எளிதில் உலர வைக்க, இராணுவ வாகன விளக்குகளில், நோய்வாய் பட்ட பயிர்களை கண்டறிய அ.சி.கதிர்கள் பயன்படுகிறது.
§ செயற்கைகோள் படங்கள் மூலம் வானிலை அறிவிப்பில் பயன்படுகிறது.
மைக்ரோ அலைகள்:
§ 1mm- 10cm வரை குறைந்த அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகள் மைக்ரோ அலைகள் எனப்படும்.
§ மைக்ரோ அலை அடுப்பு, மேக்னட்ரான், கிளிஸ்ட்ரான், இயங்கு அலை குழாய் – இவை மைக்ரோ அலை உற்பத்தியாகும் இடங்களாகும்.
§ தொலைபேசி தொடர்புகள், செயற்கைகோள் தொலைதொடர்பு, ரேடார் சாதனங்கள், சமையல் சாதனங்கள் – இவற்றில் மைக்ரோ அலைகள் பயன் படுகின்றன.
§ மைக்ரோ அலை அடுப்பு 12cm அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை உருவாக்கும்.
§ தானியகிடங்குகளில் உள்ள பூச்சிகளை அழிக்க, உணவுப்பொருள்களை அதிகம் சூடுபடுத்தாமல் பாக்டீரியாவை அழிக்க மைக்ரோ அலைகள் பயன்படுகின்றன.
ரேடியோ அலைகள்: பெரும அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் ரேடியோ அலைகள் எனப்படும். விண்மீன், விண்மீன் திரள்கள் ரேடியோ அலைகளை உற்பத்தி செய்கின்றன
No comments:
Post a Comment